சனி, 23 ஜனவரி, 2010

அரை ஸ்பூன் உப்பு குறைத்தால் 1 லட்சம் பேர் வாழ்நாள் நீளும்

அமெரிக்காவின் யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியாவின் மருந்தியல் துறை பேராசியர் கிர்ஸ்டன் பிபின்ஸ்& டொமிங்கோ தலைமையிலான குழுவினர், பல்வேறு கொடிய நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
இதில், உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், இதய நோய், மாரடைப்பு, வலிப்பு நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, உப்பைக் குறைத்துக் கொள்வதன் மூலம் கொடிய நோயிலிருந்து விடுபடலாம் என்கிறது ஆய்வு முடிவு.

அமெரிக்காவில் ஆண்கள் சராசரியாக 10.4 கிராமும், பெண்கள் 7.3 கிராமும் சாப்பிடுகின்றனர். இது பரிந்துரைக்கப்படும் அளவைவிட மிகவும் அதிகம். அதாவது சராசரியாக 50 வயதுக் குட்பட்டவர்கள் 3 முதல் 5 கிராம் வரை மட்டுமே உப்பு உட்கொள்ளலாம். எனவே, உப்பு அதிகம் சாப்பிடுபவர்கள் தினமும் குறைந்தது 3 கிராமாவது குறைவாக சாப்பிட்டால் 92 ஆயிரம் பேரை மரணத்திலிருந்து காப்பாற்றலாம் என அந்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1.1 லட்சம் கோடியை மிச்சப்படுத்த முடியும் என ஆய்வு கூறுகிறது.

0 comments:

கருத்துரையிடுக