ஞாயிறு, 24 ஜனவரி, 2010

3 மாதத்திற்குள் 38 நகரங்களில் 3ஜி சேவை: பி.எஸ்.என்.எல்.




அடுத்த 3 மாதங்களுக்குள் தமிழகத்தின் 38 நகரங்களில் 3 ஜி சேவை வழங்கப்படும் என்று பாரத் சன்சார் நிகாம் கூறியுள்ளது. 2010ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 கோடி பிராட்பேன்ட் இணைப்புகள் என்ற குறிக்கோளும் அடையப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

கோயம்புத்தூரில் 3ஜி சேவை தொடங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர் குல்தீப் கோயல், அடுத்த மூன்று மாதங்களுக்குள் தமிழகத்தின் 38 நகரங்களில் 3ஜி சேவை வழங்கப்படும் என்று கூறினார். 19 இலட்சம் 2ஜி இணைப்புகளும், 4 இலட்சம் 3ஜி இணைப்புகளும் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
விரைவில் இந்தியாவின் 760 நகரங்களுக்கு 3ஜி சேவை வழங்கப்பட்டுவிடும் என்று கூறிய அவர், முதலில் 3.6 மெகாபைட் பெர் செகண்ட் என்ற வேகத்தில் வழங்கப்படும் சேவை, பின்னர் 7.2 ஆகவும், பின்னர் 14.4 மெகாபைட் பெர் செகண்டாகவும் வேகம் அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.
புதுச்சேரி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் பிப்ரவரி மாதம் முதல் 3ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது.

0 comments:

கருத்துரையிடுக