உணவு திருவிழாவில் 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெறுகிறது. இதில் பழங்கால கிராமிய உணவு முதல், நவீன கால துரித உணவு வகைகள் வரை இடம் பெறுகிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அறிவியல் கண்காட்சி, புத்தக கண்காட்சியும் நடைபெறுகிறது. 24-;ம் தேதி நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு நெல்லை பல்கலைக்கழக துணை வேந்தர் சபாபதி மோகன் தலைமை வகிக்கிறார்.
சனி, 23 ஜனவரி, 2010
திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரியில் அறுசுவை உணவு திருவிழா.
திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரியில் அறுசுவை உணவு திருவிழா நாளை (24-ம் தேதி) தொடங்குகிறது. திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி வளாகத்தில் 2வது முறையாக அறுசுவை உணவு திருவிழா மற்றும் மேஜிக் கொண்டாட்டங்கள் 2010 நிகழ்வுகள் 24-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்கிறது.
உணவு திருவிழாவில் 150க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெறுகிறது. இதில் பழங்கால கிராமிய உணவு முதல், நவீன கால துரித உணவு வகைகள் வரை இடம் பெறுகிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அறிவியல் கண்காட்சி, புத்தக கண்காட்சியும் நடைபெறுகிறது. 24-;ம் தேதி நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு நெல்லை பல்கலைக்கழக துணை வேந்தர் சபாபதி மோகன் தலைமை வகிக்கிறார்.
விழாவை சபாநாயகர் ஆவுடையப்பன் தொடங்கி வைக்கிறார். ஹெலன்டேவிட்சன் எம்.பி., ரெஜினால்டு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.
25-ம் தேதி இலக்கிய விழாவில் சன்.டிவி புகழ் வீரபாண்டியன், 26ம் தேதி குடியரசு தின விழாவில் அமைச்சர் சுரேஷ்ராஜன், 27-ம் தேதி சமூக நல்லிணக்க விழாவில் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ், 28-ம் தேதி விளையாட்டு விழாவில் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., 29-ம் தேதி இஸ்லாமிய கல்வி கருத்தரங்கில் பேராசிரியர் காஜாகனி, 30-ம் தேதி கல்லூரி விழாவில் ஐகோர்ட் நீதிபதி அக்பர் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

0 comments:
கருத்துரையிடுக