திங்கள், 25 ஜனவரி, 2010
எம்ஜிஎம் நிறுவனத்தை வாங்க அனில் அம்பானி குழுமம் 7 நிறுவனங்களுடன் போட்டி
அமெரிக்கா வின் எம்ஜிஎம் நிறுவனத்தை வாங்க அனில் அம்பானி குழுமம் உட்பட 7 நிறுவனங்கள் போட்டியில் குதித்துள்ளன. பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனம் எம்ஜிஎம். டாம் அண்ட் ஜெர்ரி உட்பட சர்வதேச புகழ்பெற்ற கார்ட்டூன்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அது தயாரித்தது. அது இப் போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. திவால் அடையும் சூழ்நிலைக்கு முன்னதாக நல்ல விலைக்கு விற்க அதன் நிர்வாகம் விரும்புகிறது.
இதை அறிந்ததும் ராபர்ட் முர்டோச் தலைமையிலான நியூஸ் கார்ப் உட்பட 7 நிறுவனங்கள், எம்ஜிஎம்மை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன. அவற்றில் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் ஒன்று.
தவிர, டைம் வார்னர், லயன்ஸ் கேட், சமிட், லிபர்டி மீடியா ஆகிய பிரபல நிறுவனங்களும் கோதாவில் இறங்கியுள்ளன. எம்ஜிஎம் நிறுவனத்தை வாங்க ரூ.6,900 கோடி முதல் ரூ.11,500 கோடி வரை இந்நிறுவனங்கள் விலையைக் குறிப் பிட்டுள்ளன.
அவற்றில் ரிலையன்ஸ், நியூஸ் கார்ப். நிறுவனங்களின் விண்ணப்பம் தீவிர பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது

0 comments:
கருத்துரையிடுக