செவ்வாய், 26 ஜனவரி, 2010

தூக்கிலிடப்பட்டார் சதாமின் உறவினர் கெமிக்கல் அலி!

சதாம் உசேனுக்கு அடுத்தபடியாக அவரின் வலது கையாக விளங்கிய கெமிக்கல் அலிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. வளைகுடா பிரதேசத்தில் உள்ள எண்ணெய் வயல்களை கொள்ளை அடிப்பதில் அமெரிக்காவிற்கு தொல்லையாக இருந்தவர் சதாம் உசேன். இவரின் குடைசல் தங்க முடியாமல் அவரது தலைமையில் இருந்த நாடான இராக்கில் பேரழிவை உண்டாக்கும் அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறி போர் தொடுத்த அமெரிக்கா, இறுதியில் ஒரு ஸ்பூனளவு கூட அணு ஆயுதம் தயாரிக்கும் மருந்துகளைக் கண்டுபிடிக்காததால் இறுதியில் ஈராக்கின் உள்நாட்டு விசயத்தில் சதாம் ஆட்சியில் இருந்த போது நடந்த விஷயத்தைக் காரணமாக காட்டி சதாம் உசேனை தூக்கிலிட்டது. நேற்று சதாம் ஹுசைனின் வலதுகரமாக விளங்கிய கெமிக்கல் அலி என அழைக்கப்பட்ட அலி ஹசன் அல் மஜீதுக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சதாம் ஹுசைனின் நெருங்கிய உறவினரான அல்-மஜீத் நேற்று தூக்கிலப்பட்டதாக இராக் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் இவருக்கு அளிக்கப்பட்ட நான்காவது மரண தண்டனை, 1988ம் ஆண்டில் ஹலாப்ஜா என்ற கிராமத்தில் இராக்கிய குர்திஷ் இன மக்கள் மீது நடத்தப்பட்ட கூட்டுப்படுகொலைக்காக அளிக்கப்பட்டது. இந்த படுகொலையின் போது ஐயாயிரம் பேர் வரையில், பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக