வெள்ளி, 22 ஜனவரி, 2010

கச்சா எண்ணெய் விலை 76 டாலருக்கும் கீழ் வீழ்ச்சி: மேற்குலகம் அதிர்ச்சி


கச்சா எண்ணெய் விலை இன்று காலை 76 டாலருக்கும் கீழ் சரிந்தது. அமெரிக்க சந்தையின் தேவையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சிதான் இந்த விலைக்குறைவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி 'நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் லைட் ஸ்வீட்' கச்சா எண்ணெய் 75.83 டாலர்களாக விற்பனையானது. மார்ச்சில் டெலிவரி செய்ய வேண்டிய 'பிரண்ட் நார்த் ஸீ க்ரூட்' 74.45 டாலராக விற்பனை செய்யப்பட்டது.
அமெரிக்காவின் சக்தி துறை (Department of Energy) வெளியிட்ட அறிக்கைப்படி, எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையங்களின் கொள்ளளவு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 78 சதவிகிதமாக குறைந்துள்ளதாம். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த அளவு தேவைக் குறைவு ஏற்பட்டதே இல்லையாம்.
அமெரிக்காவின் கேஸோலின் இருப்பு அதிகபட்ச அளவான 3.9 மில்லியன் பேரல்களாக இருந்தாலும், அதன் கச்சா எண்ணெய் இருப்பு 400000 பேரல்கள் அதிரடியாகக் குறைந்திருப்பது கவலை கொள்ள வைத்துள்ளது.
கடந்த இரு தினங்களில் 1.50 டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இந்த நிலை மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக