வியாழன், 21 ஜனவரி, 2010

முதியோர் ரயில் போக்குவரத்து சலுகைகள்

பின்வரும் சலுகைகளையும் வசதிகளையும் மூத்த குடிமக்களுக்காக ரயில்வே அமைச்சகம் வழங்குகிறது.
  • மெயில்கள்/ராஜ்தானி/ஷதாப்தி/ ஜான் ஷதாப்தி போன்ற விரைவு ரயில் வண்டிகள் ஆகிய அனைத்திற்கும் 30% தள்ளபடி உண்டு.
  • முதல், இரண்டாவது மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு கட்டணங்களில் இதய நோயாளியாக உள்ள மூத்த குடிமக்களுக்கும் அவருடைய உதவியாளருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து இதய நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளும் இடத்திற்குச் சென்று வருவதற்கு கட்டணங்களில் 75% சலுகை வழங்கப் படுகிறது.
  • ஓய்வு பெற்ற இந்திய ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக, சலுகையில் சென்று வர அனுமதி உண்டு.
  • மேற்கு ரயில்வேக்களில் இருப்பது போல குறிப்பிட்ட நேரங்களில், புற நகர் ரயிலில் சில பெட்டிகள் முதியோருக்காக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. பகல் 12 முதல் 3 மணி வரை 7 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தகுதி

60 மற்றும் அதற்கு மேல் வயதுடைய மூத்த குடிமக்கள்
தேவைப்படும் ஆவணம்
பயணச்சீட்டு வாங்கும்போது எந்தச் சான்றிதழும் தேவையில்லை. (பயணத்தின் போது ஏதாவது அரசு நிறுவனம்/ஏஜென்சி/ உள்ளூர் நிறுவனம் அதாவது, அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம்,போன்றுவை மற்றும் பஞ்சாயத்து / மாநகராட்சி / நகராட்சி அல்லது வேறு எந்த அதிகாரம் பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் போன்ற உள்ளூர் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ்கள் இவற்றில் எதையாவது அவர்கள் தங்களுடைய வயதுக்கான சான்றாக வைத்திருக்க வேண்டும்).
பெறுவதற்கான நிபந்தனைகள்
To travel a distance of 500 Kms or more.

எப்படிப் பெறுவது

உரிய படிவத்தில் விண்ணப்பிக்கவும்
  • அதற்குரிய கவுன்டரில் வயது சான்றைக் காட்டவும்.
  • தொலைபேசி எண். 1330 (ஆங்கிலத்தில் விசாரிக்க)
  • தொலைபேசி எண். 1335 (ஹிந்தியில் விசாரிக்க)
மும்பை உள்ளூர் ரயில்களில் ஒரே ஒரு பெட்டியில் மட்டும் 8-10 இருக்கைகள் வரை மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்ககும்.
சக்கர நாற்காலி பயன்படுத்தும் மூத்த குடிமக்களுக்காக சிறப்புப் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிகளில் சக்கர நாற்காலிகள், கைத்த்டடிகள் வைப்பதற்கான இடமும் விசேஷமாக வடிவமைக்கப் பட்ட கழிப்பறைகளைக் கொண்டுள்ளன. பல ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலியில் வரும் மூத்த குடிமக்களுக்காக சரிவுப் பாதைகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு ரயில் தண்டவாளங்களைக் கடக்கும் அல்லது படிகட்டுகளில் ஏறும் சிரமங்கள் ஏற்படாது. அனைத்து ரயில் சந்திப்பு நிலையங்களிலும், மாவட்டத் தலைமையகம் மற்றும் பிற முக்கியமான ரயில் நிலையங்களிலும் முதியோர் உபயோகத்திற்காகச் சக்கர நாற்காலிகள் உள்ளன.
கீழ் பெர்த் படுக்கை வசதி ஒதுக்கீடு
கீழ் பெர்த் படுக்கை வசதி ஒதுக்கீடு ஏசி & ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகளில் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்காக வழங்கப் படவேண்டும்.
இந்தியாவில் முதியோர் நலன்
முதியோர் நலனுக்கான தேசிய முன்முயற்சி

சிறப்பு கவுன்டர்கள்

பல்வேறு பயணிகள் முன்பதிவு முறை (பி.ஆர்.எஸ்) மையங்களில், ஒரு ஷிப்டுக்கு 120 டிக்கெட்டுக்கு மேல் தேவை இருக்கும் பட்சத்தில் மூத்த குடிமக்களுக்காக தனி முன் பதிவு கவுன்டர்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. இந்த வசதியைத் தொடர அவ்வப்போது இந்த நிலை புதுப்பிக்கப் படுகிறது. (இந்திய அரசு அலுவலக மெமோ பார்க்க, ரயில்வே அமைச்சகம் (ரயில்வே போர்டு), புது தில்லி, எண். 96/TG-I/20/P dated 20.02.1996)

0 comments:

கருத்துரையிடுக