புத்தாண்டு பிறந்து 20 நாட்களுக்குள் 9 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் 5 வங்கிகள் ஒரே நாளில் மஞ்சள் கடுதாசி கொடுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மட்டுமே 140 வங்கிகள் திவாலாகின அமெரிக்காவில். இது கடந்த 18 ஆண்டுகளில் அதிகபட்ச வீழ்ச்சியாகும். இந்த நிலையில் 2010-ம் ஆண்டும் வீழ்ச்சிக்கு விதிவிலக்காக இல்லை. கொலம்பியா ரிவர் வங்கி, எவர்கிரீன் வங்கி, சார்ட்டர் வஹ்கி, பேங்க் ஆப் லீடன், பிரிமியர் அமெரிக்கன் வங்கி ஆகிய 5 வங்கிகள் ஒரே நாளில் மூடப்பட்டன (ஜனவரி 22). இவற்றால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 531.7 அமெரிக்க டாலர்கள்.
இவற்றைத் தவிர மேலும் 4 வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 2008-ல் லெஹ்மன் பிரதர்ஸ் வங்கி திவால் நோட்டீஸ் கொடுத்த பிறகு 164 வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக