அங்கு சட்ட விரோதமாக குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருப் பது தெரிய வந்தது. இதையடுத்து நெல்லையில் சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரி ஷகினாபானு கடந்த 23&ந் தேதி போதகர் இல்லத்தில் இருந்த 76 குழந்தைகளை மீட்டு சென்றார். அந்த குழந்தை கள் நெல்லையில் உள்ள சரணாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையடுத்து நெல்லையில் உள்ள குழந்தைகள் சரணாலயத்தை சேர்ந்த உறுப்பினர் சந்திரசேகரன், போதகர் ஷாஜி மீது களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஷாஜி மீது குழந்தைகளை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்திருந்ததாகவும், குழந்தை களுக்கு மனரீதியாக பாதிப்பு ஏற்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளில் ஷாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி அறிந்த ஷாஜி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளரிடம் குமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ அறிக்கை கேட்டுள்ளார். அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதன் அடிப்படையில் ஆர்டிஓ விசார ணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக