புதன், 6 ஜனவரி, 2010

குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு பிஇ-எம்எபிபிஎஸ் இலவச கல்வி


குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இலவச கல்வி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையி்ன் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் தொடங்கிய இக் கூட்டத்தில் அவரது உரையில் தமிழக அரசின் பல புதிய திட்டங்கள் இடம் பெற்றன
குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இலவச கல்வி அளிக்கப்படும். இதற்கு வருமான மற்றும் ஜாதி சான்றிதழ்கள் ஏதும் தேவையில்லை. வரும் கல்வியாண்டு முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக