செவ்வாய், 19 ஜனவரி, 2010

கூடுதல் மின் கட்டணம் இன்று முதல் அமலாகிறது

உயர் அழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள தொழிற்சாலைகளக்கு, 'பீக் அவர்' நேரத்தில், கூடுதல் கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் திட்டம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. தமிழகத்தில் நிலவும் மின்தட்டுப்பாடு காரணமாக, மின் கட்டுப்பாட்டு முறையை, தமிழ்நாடு மின்சார வாரியம் அமல்படுத்தி வருகிறது.
இதன்படி, உயர் அழுத்த மின் இணைப்பைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்தடை அமலில் உள்ளது. இந்த மின்தடையை விலக்கிக் கொள்ள கோரியதுடன், கூடுதல் விலை கொடுக்கவும் தொழில் அமைப்புகள் விருப்பம் தெரிவித்தன. இதையடுத்து, மின்சாரத்திற்கு, யூனிட் ஒன்றுக்கு ஏழு ரூபாய்க்கு மிகாமல் கட்டணம் பெற்றுக் கொள்ள அனுமதி கோரி, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்வாரியம் விண்ணப்பம் செய்தது. பொதுமக்கள் கருத்து கேட்புக்குப் பிறகு, ஆணையம் இதற்கு அனுமதி வழங்கியது.

0 comments:

கருத்துரையிடுக