வியாழன், 21 ஜனவரி, 2010

திருவிதாங்கோடு பழைய பள்ளிக் குளத்தில் பிணம்

இறையன்பிற்குரியவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.
கழிந்த 18-01-10 ந்தேதி திங்கள்கிழமை காலை சுமார் 7 மணியளவில் திருவிதாங்கோடு பழைய பள்ளிக் குளத்தில் பிணம் ஒன்று மிதக்கிறது என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவி பள்ளிக்குளத்தில் பெரும் கூட்டம் ஒன்று கூடியது. காவல் துறையினர் முன்னிலையில் பிணம் கரைக்கு கொண்டு வரப்பட்டது. பிணத்தை பார்த்த யாருக்கும் அடையாளம் தெரிய வில்லை. அப்போது அந்த கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த ஜனாப். செய்து முஹம்மது (அல் கல்ப் சிட்டி, திருவிதாங்கோடு) அது தனது சின்னம்மா மகன் ஜனாப் ஜஹபர் (வயது 40) என்று அடையாளம். காட்டினார். 
ஜனாப் ஜஹபர் அவர்கள் முந்தின நாள் மதியம் சகோதரர் செய்து முஹம்மது அவர்கள் வீட்டிற்கு வந்து உணவு அருந்தி விட்டு ஆற்றங்கரை பள்ளிக்கு போகிறேன் என்று சொல்லி கொண்டு கிளம்பியிருக்கிறார். இதனிடையில் பள்ளிக்கு வந்த அவர் குளத்தை பார்த்ததும் குளிக்க இறங்கியிருக்கிறார். நீச்சல் தெரியாத அவர் வழுக்கி விழுந்து இறந்து இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டது. சடலத்தில் எந்த வித காயம் இல்லாததாலும்,அவர் உடுத்தியிருந்த துணிமணிகள் கரையிலேயே இருந்ததாலும், அடையாளம் உடனேயே கண்டு கொள்ளப்பட்டதாலும் சடலம் உடனேயே காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு , திருவனந்தபுரம் பீமா பள்ளியில் வாழும் அவருடைய உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஜனாஸாவை கொண்டு சென்ற அவர்கள் ஜனாஸாவை திருவனந்தபுரத்தில் அடக்கம் செய்ததாக தகவல் கிடைத்தது. 
மர்ஹூம் ஜஹபர் அவர்களுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உண்டு. 
எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து அவருக்கு சுவனத்தை வழங்கட்டும். அவர் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு பொறுமையை வழங்கட்டும்.ஆமீன். 
நன்றி:
எம்.ஜி.எம்.மலுக்கு முஹம்மது. 
திருவிதாங்கோடு.

0 comments:

கருத்துரையிடுக