தரைவழி இணைப்பு, பிராட்பேண்ட், இன்டெர்நெட் வசதியுள்ள ஒயர்லெஸ் போன் போன்றவற்றுக்கு வாடிக்கையாளர்களை தேடி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் இனி வீடு தேடி வருவர். இது தொடர்பான திட்டத் தை பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. தேவைப்படுவோர் இனி எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும். தரைவழி இணைப்பு பெற்றிருப்போ ரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவதை சரிகட்டவும், பிராட்பேண்ட் விஷயத்தில்
முன்னேற்றம் காணவும் இந்த ‘புராஜக்ட் உடான்’ என்ற புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாகர்கோவில் உட்பட பெரும்பாலான பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பிராட்பேன்ட், லேண்ட் லைன் இணைப்பு தேவையென்றால் எல்எல் அல்லது பிபி என்று டைப் செய்து 54141 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அல்லது கட்டணமில்லாத எண்ணில் 1800 4255 161 என்ற அழைத்து தகவல் அளித்தால் போதும் பி.எஸ்.என்.எல் பிரதிநிதி வீடு தேடி வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
பி.எஸ்.என்.எல் குறித்த வேறு விபரங்களுக்கு பி.எஸ்.என்.எல் என்று டைப் செய்து எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும். 7 நாட்களுக்குள் இணைப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதே இந்த திட்டம் ஆகும் என்று பி.எஸ்.என்.எல் வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments:
கருத்துரையிடுக