வெள்ளி, 29 ஜனவரி, 2010

ஆப்பிள் ஐபேட் கம்ப்யூட்டர்!

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் டேப்ளட் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் சான்ஃபிரான்சிஸ்கோவில் இதை அறிமுகப்படுத்தினார். பார்ப்பதற்கு மிக ஸ்டைலாக, வெறும் 1.25 செ.மீ அடர்த்தியில், 680 கிராம் எடையுடன், 24.3 செ.மீ கிளாஸ் டச் ஸ்கீரினுடன் காட்சியளிக்கிறது ஆப்பிள் ஐபேட்.
இ-புக், பிரவுசிங், வீடியோ காட்சிகளை துல்லியமான, தெளிவான தரத்துடன் பார்பதற்கு மிக ஏற்றவகையில் இந்த ஐபேட் உள்ளது. ஆனால் இதன் விலை
ரூ.23,250 முதல் ரூ. 38,600 வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் கேமரா இல்லை. இண்டர்நெட்டில் அனிமேஷனை கையாளும் சாப்ட்வேரை இதில் பயன்படுத்த முடியாது என பல குறைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
இதை ஒரு 'ஓவர்சைஸ் ஐபாட்' என்று தான் சொல்ல வேண்டும் எனவும் சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், 'ஆப்பிள் ஐபேட் பிரவுசிங், வீடியோ விளையாட்டு போன்றவற்றுக்கு மிகச் சிறந்த சாதனமாக அமையும் என்று ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார். ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரை விட மிருதுவாகவும், கையாள எளிதாகவும், ஒரு ஸ்மார்ட் போனை விட தரமான வகையிலும் இந்த ஐபேட் திகழும் என்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக