வியாழன், 28 ஜனவரி, 2010
தர்கா புனரமைப்பு பணிக்கு லஞ்சம்
வேலூர், ஆற்காடு நகரில் உள்ள முஸ்லிம் தர்கா செயலாளராக இருப்பவர் குலாப்கான். இவர் தர்காவுக்கு சொந்தமான காலியிடத்தில் கழிப்பறை கட்டவும், புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் ரூ.2 லட்சம் திட்ட மதிப்பீடு தயார் செய்து அதற்கான அங்கீகாரத்துக்காக வக்பு வாரிய வேலூர் அலுவலக கண்காணிப்பாளர் பாபுநவாப்கானை அணுகினார்.
அவர் இதை அங்கீகரித்து பணிகளை தொடங்க தனக்கு ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரூ.3 ஆயிரம் பணத்தை கடந்த 15ம் தேதி பாபுநவாப்கானிடம் குலாப்கான் கொடுத்துள்ளார்.
ஆனால், ‘நான் கேட்டபடி மேலும் ரூ.2 ஆயிரம் தந்தால்தான் பணிக்கான அங்கீகாரம் தர முடியும்’ என்று பாபுநவாப்கான் கூறியுள்ளார். இதையடுத்து குலாப்கான் இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் அறிவுரைப்படி, குலாப்கான் நேற்று மாலை ரூ.2 ஆயிரத்தை வேலூர் காந்தி ரோடு வக்பு வாரிய அலுவலகத்தில் இருந்தபோது பாபுநவாப்கானிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி ராமேஸ்வரி, இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் பாபுநவாப்கானை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக