வியாழன், 28 ஜனவரி, 2010

7 ஆண்டுகளில் நிலவில் இந்தியா : இஸ்ரோ தலைவர் உறுதி!

இந்திய விண்வெளி துறை ஆராய்ச்சியில் தற்போது நல்ல வளர்ச்சி கிடைத்துள்ளதால், அடுத்த 7 ஆண்டுகளில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ மேற்கொள்ளும் என்று அதன் தலைவர் ராதகிருஷ்ணன் தெரிவித்தார்.பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழக வளாகத்தில், எழுத்தாளர் எஸ்.கே.தாஸ் எழுதியுள்ள ‘மூன் வித் சந்திராயன்&1’ என்ற நூல் வெளியிட்டு விழா நடந்தது. இதில் சந்திராயன்-1 வெற்றியை தொடர்ந்து சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்புவது தொடர்பாக முயற்சி மேற்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்ற நமது நீண்டகால கனவை நனவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இன்னும் 7 ஆண்டுகளில் இதை இஸ்ரோ செய்து முடித்து, சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி பிடிக்கும் என்று கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக