வியாழன், 21 ஜனவரி, 2010

ஆப்கானிஸ்தானில் இந்தியர் கடத்தல்

ஆப்கானிஸ்தானில் காணாமல் போன இந்தியர் முகமது நயீம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். நயீம் ஆப்கானிஸ்தானில் உள்ள எச்.இ.பி நிறுவனத்துக்காக பணியாற்றி வந்தார். இந்த கம்பெனி ஆப்கானிஸ்தான் ராணுவ பயிற்சி மையத்துக்காக வேலை செய்து வந்தது. அவர் கர்நாடக மாநிலம் மங்களூர் நகரை சேர்ந்தவர் ஆவர்.
நயீம் தன் உடன் வேலை செய்யும் நேபாள நாட்டுக்காரருடன் ஹெராட் நகரில் இருந்து அத்ராக்சன் நகருக்கு சென்றபோது கடத்தப்பட்டார். அவர் பயணம் செய்த வாகனம் நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்ததை ஒரு டாக்சி டிரைவர் பார்த்து விட்டு தகவல் கொடுத்தார்.
கிரிமினல் கும்பல் தான் அவரை கடத்தி இருக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நம்புகிறார்கள். நயீம் கடத்தப்பட்டது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தலீபான் தீவிரவாதிகள் தெரிவித்தனர்.
நயீம் பயணம் செய்த வாகனத்தின் டிரைவரை நேற்று காலை கடத்தல்காரர்கள் விடுவித்தனர். அவரை ராணுவம் பிடித்து விசாரணை செய்து வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக