செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
பிடிக்காத நண்பனை துப்பாக்கியால் சுட்ட பிளஸ்1 மாணவன்!
கான்பூர்: பிளஸ்1 படிக்கும் மாணவர் பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே சக மாணவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் கான்பூரில் நடந்துள்ளது.
கான்பூர் அருகே சாக்கேரி என்ற ஊரில் கே.ஆர் எஜுகேஷன் சென்டர் என்ற பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு பிளஸ்1 வகுப்பில் படிக்கும் மாணவர் அமான் சிங். இன்று பள்ளிக்கூடத்துக்கு துப்பாக்கியுடன் வந்த அமான் சிங், தனது சக மாணவரை யாரும் எதிர்பாராத வகையில் சுட்டுத்தள்ளினார். குண்டுகாயங்களுடன் கீழே விழுந்த மாணவரை ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேற்று வகுப்பு நேரத்தில் தன்னை அவமானப்படுத்தும் வகையில் பேசியதால், அமான் சிங் கோபமடைந்து துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. அமான் சிங்கை பள்ளி நிர்வாகத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அமான் சிங் கொண்டுவந்த துப்பாக்கி அவருடைய மாமாவும், சமாஜ்வாதி கட்சிப் பிரமுகருமான ரவி பிரதாப் சிங்கிற்கு சொந்தமானது என்று போலீசார் தெரிவித்தனர்.
0 comments:
கருத்துரையிடுக