திங்கள், 8 பிப்ரவரி, 2010

விசா விதிமுறைகள் தளர்வு சவுதியில் பணிபுரிவோர் தங்களுடன் குடும்பத்தை அழைத்துச்செல்ல அனுமதி!

தமிழகம், கேரளா உள்பட இந்தியா முழுவதிலு மிருந் தும் பல லட்சம் பேர் சவுதி அரேபியா, துபாய், குவைத், பஹ்ரைன், ஓமன் உட்பட பல்வேறு நாடு களில் பணிபுரிந்து வரு கின்றனர்.
இதில் துபாய் உட்பட பல்வேறு நாடு களில் பணிபுரியும் தொழி லாளர்கள் பெறும் சம் பளத்திற்கேற்ப தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்து வர அந் நாட்டரசுகள் விசா வழங் குகிறது. ஆனால் சவுதி அரேபியாவைப் பொறுத்த வரை டாக்டர், இன்ஜினி யரைத் தவிர மற்ற பணி யாளர்கள் தங்களது மனைவி உட்பட குடும்பத் தை அழைத்துவர இது வரை அனுமதி யில்லாமல் இருந்தது.இந்நிலையில் சவுதி அரேபியாவில் பணிபுரியும் எலக்ட்ரிஷியன், சூபர் வைசர், ஏசி மெக்கானிக், ரெப்ரி ஜிரேட்டர் மெக்கானிக் உட்பட பலர் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை பிரிந்து வாழ்வதால் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேர்வதால் குடும்பத் தினரையும் உடன் அழை த்துச் செல்ல விசா வழங் குமாறு அந்நாட்டு மன்னரி டம் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் வலியுறுத் தின.
இதேபோல் இந்தியாவும் வலியுறுத்தி யிருந்தது. இதையடுத்து குறிப்பிட்ட விகிதத்திற்கு அதிகமாக சம்பளம் பெ றும் அனைத்து பணியாளர் களும் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை உடன் அழைத்து வர சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இந்தியாவிலிருந்து சவுதி அரேபியாவில் பணிபுரியும் சுமார் 70 லட்சம் பேர் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக