செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

ரயில்வே விசாரணைக்கு 138 என்ற புதிய எண் அறிமுகமாகிறது!

ரயில்வே விசாரணைக்கு மேலும் ஒரு தொலைபேசி எண்ணை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது ரயில்வே நிர்வாகம். வரும் பிப்ரவரி 24ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே விசாரணைகளுக்கு தற்போது 139 என்ற தொலைபேசி எண் நடைமுறையில் உள்ளது. லட்சக்கணக்கான தொலைபேசி விசாரணைகள் வருவதால் 139 தொலைபேசி எண் எப்போதும் பிஸியாகவே இருந்து வருகிறது. நாளொன்றுக்கு 8 லட்சம் விசாரணை அழைப்புகள் இதன் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த மாதம் பனிமூட்டம் காரணமாக பல ரயில்கள் தாமதமாக ஓடின. இது தொடர்பாக தகவல்களை தற்போது நடைமுறையில் உள்ள விசாரணை எண் 139ல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே விரைவாகவும் சரியான தகவல்களையும் கொடுப்பதற்காக ரயில்வே நிர்வாகம் விசாரணை அமைப்பை மேம்படுத்தும் வகையில் புதிய கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரை பயன்படுத்துகிறது.
138 என்ற புதிய தொலைபேசி எண்ணுக்கு தொலை தொடர்புத் துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 24ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே விசாரணைக்கான 138 எண்ணை இணையதளம் வழியாகவோ அல்லது செல்போன்கள் மூலமாகவோ பெற பதிவு செய்ய வேண்டும். ஆனால் கட்டண அழைப்பாகும். 138 விசாரணை எண் மூலம் ஹோட்டல் அறைகள் பதிவு செய்ய முடியும் மேலும் சுற்றுலா விவரங்களையும் பெற்றுக்கொள்ளலாம்

0 comments:

கருத்துரையிடுக