செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

வேலையில் கவனம் இந்தியர்கள் முதலிடம்!

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் செயல்பாடு குறித்து கெனக்சா சந்தை ஆய்வு நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதன் விவரம்: தங்களு டைய பணிகளை கண் ணும் கருத்துமாக செய் வதில் இந்தியர்கள் முன் னிலை வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வ தேச அளவில் தங்களு டைய பணியை முழு ஈடுபாட்டுடன் விரும்பி செய்வதாக 56 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியர்களைப் பொறுத்தவரை இது 72 சதவீதமாக உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேசில் (63%), கனடா (60%), அமெரிக்கா மற்றும் ஜெர்மனி (59), சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா (58%) ஆகிய நாடுகள் இடம் பிடித்துள் ளன. ஜப்பான் மக்களில் வெறும் 41 சதவீதம் பேர் மட்டுமே தங்களுடைய வேலையை விரும்பி செய்வது தெரியவந்துள்ளது.
தங்கள் பணியில் அதிக கவனம் செலுத்தும் இந்திய ஊழியர்களில் உதவியாளர்கள் (கிளர்க்) 77 சதவீதத்துடன் முன்னிலை வகிக்கின்றனர். சூப்பர்வைசர்கள் (76%), மேலாளர்கள் (74%), விற்பனையாளர்கள் (72%) மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் (70%) அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக