ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
+2, SSLC பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான அரசுபொதுத் தேர்வுகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். தற்போது செய்முறைத் தேர்வுகள் நடந்து வருகின்றன.பொதுத் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் தயாராகி வருகிறார்கள். பரீட்சையின்போது முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க அரசுதேர்வுத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆள் மாறாட்டம், காப்பி அடித்தல் போன்ற முறைகேடு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
தேர்வு ஹாலில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் அது பற்றி கண்காணிப்பாளர் புகார் செய்தால் அந்த மாணவர் தேர்வு எழுத தடை விதிக்கவும் அதிகாரம் உள்ளது.
இந்நிலையில் அரசு பொதுத் தேர்வு எழுத தயாராகி வரும் மாணவர்களுக்கு மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் ஷூ, சாக்ஸ் மற்றும் பெல்ட் அணிந்து தேர்வு ஹாலுக்குள் செல்லக்கூடாது. அவற்றை தேர்வு மையத்திற்கு நுழையும் முன்பு வெளியே விட்டு செல்ல வேண்டும்.
அதேபோல நவீன கைக்கடிகாரம் அணியவும் செல்போன் கால்குலேட்டர் போன்றவற்றை எடுத்துச் செல்லவும் அனுமதி கிடையாது.தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான கையேட்டில் இவ்விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிட் பேப்பர்களை ஷீ,சாக்ஸ் மற்றும் பெல்ட்டுகளில் மறைத்து வைத்து கொண்டு செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை புதிதாக மேற்கொள்ளப்படுகிறது.

0 comments:
கருத்துரையிடுக