புனே குண்டு வெடிப்பில் இந்துத் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் வழக்கைத் திசை திருப்பவே இரு தீவிரவாத இயக்கங்கள் பொறுப்பேற்றதாக அறிவித்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். கடந்த வாரம் புனே ஜெர்மன் பேக்கரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் அபினவ் பாரத் என்று இந்து தீவிரவாத அமைப்பின் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
புனே குண்டு வெடிப்பு: இந்து தீவிரவாத அமைப்பு அபினவ் பாரத் தொடர்பு!
புனே குண்டு வெடிப்பில் இந்துத் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் வழக்கைத் திசை திருப்பவே இரு தீவிரவாத இயக்கங்கள் பொறுப்பேற்றதாக அறிவித்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். கடந்த வாரம் புனே ஜெர்மன் பேக்கரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் அபினவ் பாரத் என்று இந்து தீவிரவாத அமைப்பின் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.புனே குண்டு வெடிப்புத் தொடர்பான விசாரணைக்காக காவல்துறை சிலரைப் பிடித்துள்ளது என்றும், ஆனால் அதிகாரப்பூர்வமான கைது எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது. இந்நிலையில், வெடிகுண்டின் தன்மையை ஆராய்வதற்காக தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தேசிய வெடிகுண்டு தகவல் மைய அதிகாரிகள் நான்கு பேர் நிகழ்விடத்திற்குச் சென்று, ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்து சில பொருள்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக