ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி உள்பட 20 பேரை பலாத்காரம் செய்த கேரள வாலிபர் கைது
திருவனந்தபுரம்: மிஸ்டு கால் மூலம் வசியப் படுத்தி குமரி மாவட்ட கல்லூரி மாணவி உள்பட 20 பேரை பலாத்காரம் செய்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பேரூர்கடை பள்ளியில் பிளஸ்&1 படித்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஒரு மிஸ்டுகால் வந்தது. இதையடுத்து மாணவி அந்த எண்ணுக்குதொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர் முனையில் பேசிய ஒரு வாலிபர் மாணவியை மயக்கும் வகையில் ஆசைவார்த்தைகளை பேசியுள்ளார். தொடர்ந்து செல்போனில் இருவரும் பேசிவந்தனர்.
கடந்த இருவாரத்திற்கு முன்பு இருவருக்கும் நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசைஏற்பட்டது. அந்த வாலிபர் மாணவியை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு வருமாறு அழைத்துள்ளார். நேரில் பார்த்ததும் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. திருமணம்செய்வதாக மாணவியிடம் கூறிய வாலிபர் திருவனந்தபுரம் பைபாஸ் சாலையில் உள்ள நண்பரின் வீடு மற்றும் கோவளத்தில் உள்ள ஒரு ஓட்டல் ஆகிய இடங்களுக்கு மாணவியை அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்தார். இந்நிலையில் திருமணம் செய்வது குறித்து பேசிய மாணவியை அந்த வாலிபர் மிரட்டி விரட்டியடித்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெற்றோரிடம் கூறி கதறினார். மாணவியின் பெற்றோர் நெடுமங்காடு போலீசில் புகார் செய்தனர். வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து டி.எஸ்.பி சுகேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் திருவனந்தபுரம் மலையின் கீழ் பகுதியைச் சேர்ந்த விமல்குமார்(29) என்பதும், திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை எனவும் தெரியவந்தது.
விமல்குமார் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் ஜெம்மாலஜிஸ்ட்டாகபணிபுரிந்து வருகிறார். கடைக்கு நகை வாங்க வரும் இளம்பெண்கள், மாணவிகள் தங்களது செல்போனை மேஜை மீது வைத்து விட்டு நகைகளை பார்ப்பது வழக்கம்.
நகைகளை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்கும் போது அவர்களது செல்போன்களை நைசாக எடுக்கும் விமல்குமார் அதில் இருந்து தனது செல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்துக் கொள்வார்.
இரவு ஆனதும் அந்த செல்போனுக்கு மிஸ்டுகால் கொடுப்பார். அதை பார்க்கும் பெண்கள் சிலர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசுவார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் விமல்குமார் பெண்களிடம் மயக்கும் வார்த்தைகள் பேசி வசியப்படுத்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவ்வாறு 20க்கும் மேற்பட்ட பெண்களை அவர் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் பணிபுரியும் நகைக்கடைக்கு நகை வாங்க சென்ற குமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரையும் இது போல் வசியப்படுத்தி கன்னியாகுமரி லாட்ஜூக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதே போல கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை தலச்சேரியில்உள்ள ஒரு லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது.
அவரது செல்போனில் இருக்கும் ஏராளமான இளம்பெண்களின் எண்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பலாத்காரம் செய்யப்பட்ட பேரூர்கடை மாணவி தைக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
0 comments:
கருத்துரையிடுக