திங்கள், 8 பிப்ரவரி, 2010

ரூ.25 ஆயிரத்துக்கு மனைவியை விற்ற கணவன் - மீட்பு.

ரூ.25 ஆயிரத்துக்கு கணவனால் விற்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டனர்.
ஒரிசா மாநிலத்தின் பார்கா மாவட்டத்தில் உள்ள தோல்பந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமாலினி சாஹூ. இவருக்கும் பிரதீப் சாஹூ என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டில் திருமணம் நடந்தது.இந்த நிலையில், கடந்த ஜனவரி 29ம் தேதி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தாஸ்ராத் லோதி என்பவருக்கு கமாலினியை அவரின் கணவர் விற்றுவிட்டார்.
ரூ.25 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மனைவி யை விற்றுள்ளார் பிரதீப். இதுகுறித்து கமாலினியின் தந்தை போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து பார்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து கமாலினியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பிரதீப்பிடமிருந்து கமாலினியை விலைக்கு வாங்கிய லோதி தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக