
சனி, 27 பிப்ரவரி, 2010
பெண்ணின் உடலில் 7 அங்குல மருத்துவ உபகரணத்தை வைத்து தைத்த!

பெண்ணொருவரின் சிறுநீர்ப்பை கல்லை அகற்ற சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்க, தவறுதலாக அவரின் உடலில் 7 அங்குல நீளமான மருத்துவ உபகரணமொன்றை வைத்து தையல் போட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றது.
டொனா (39 வயது) என்ற மேற்படி பெண், அறுவை சிகிச்சையை அடுத்து தொடர்ந்து தாங்கொண்ணா வேதனையை அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவருக்கு மீண்டும் சிறுநீர்ப் பையில் கல் ஏற்பட்டுள்ளதோ என சந்தேகித்தனர். உடனே ரெட்டிச்சிலுள்ள அலெக்ஸாண்ரா மருத்துவமனையில் "எம்.ஆர்.ஐ.' ஊடுகாட்டும் பரிசோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.
இதன் போது அவரது உடலில் மருத்துவ உபகரணமொன்றை வைத்து தைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பில் மருத்துவத் தாதியான டொனா விபரிக்கையில், "நான் 3 மாத காலமாக தாங்க முடியாத வேதனையை அனுபவித்தேன். நான் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன். எனக்கு என்ன நேர்ந்தது என்பதை என்னால் இப்போதும் நம்ப முடியாதுள்ளது'' என்று கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக