திங்கள், 15 பிப்ரவரி, 2010
ஆப்கானில் இறுதிக் கட்ட போர் ஆரம்பம்
தெற்கு ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வரும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புகள் அங்கு புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான்கள் பலமாக இருக்கும் மர்ஜா நகரத்திற்குள் அமெரிக்க மரைன்களும், ஆப்கான் இராணுவத்தினரும் நுழைய முடியாமல் தினறி வருகிறார்கள்.
இதற்கிடையே, மர்ஜா நகரத்தில் ராக்கெட் தாக்குதலில் பத்து பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கான் அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
போர் நடக்கும் இடத்தைவிட்டு பொது மக்களை யாரும் வெளியேற வேண்டாம் என்று பன்னாட்டு கூட்டுப் படையினர் அறிவித்திருந்தனர் என்பதும் அதற்க்கு எதிராக பல மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
0 comments:
கருத்துரையிடுக