சனி, 13 பிப்ரவரி, 2010
மாணவிகளை கேலி செய்த விவகாரம்!
நாகர்கோவில் அருகே மாணவி களை கேலி செய்ததை கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் கல்லூரி மாணவர்கள் 2 பேர் விஷம் குடித்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் கொட்டாரத்தை சேர்ந்த விஜயகுமார் (20), குளச்சல் பகுதியை சேர்ந்த பிரவீன் (20). இவர்கள் இருவரும் நேற்று (வெள்ளி) காலையில் திடீரென கல்லூரி வகுப்பறையில் வைத்து விஷம் குடித்தனர்.அவர்களை சிகிச்சைக் காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ராஜாக்கமங்கம் போலீ சார் சென்று விசாரணை நடத்தினர்.கல்லூரி மாணவர்கள் பலரும் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் குவிந்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன் கல்லூரி மாணவிகள் சிலரை விஜயகுமாரும், பிரவீனும் கேலி, கிண்டல் செய்துள்ளனர். இது பற்றி அந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் மாணவர்களை அழைத்து எச்சரித்துள்ளது. ஈவ்டீசிங், ராகிங் கொடு மைக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. உங்கள் பெற்றோரை அழை த்து வர வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.இந்த விவரம் மற்ற மாணவர்களுக்கு தெரிய வந்தது, அவர்கள் இருவரையும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்து பூச்சி மருந்தை சாப்பிட்டதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து
0 comments:
கருத்துரையிடுக