சனி, 13 பிப்ரவரி, 2010

காவல்நிலையங்களில் பதிவுசெய்யப்படும் வழக்கு விபரங்களை அறிய ‘போல்’ என்ற பெயரில் தனி இணையதளம்!

தமிழகம் முழுவதும் தற்போது காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் மூலம் பேக்ஸ் மற்றும் இ&மெயில் மூலமாக மாநில குற்ற ஆவன காப்பகத்திற்கு அனுப்புகின்றனர். இதில் முக்கியமானவை டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வைக்கும், தமிழக உள்துறை அதிகாரிகளின் பார்வைக்கும் செல்கிறது. இதன் மூலம் சில சமூக விரோத செயல்களை முன்கூட்டியே தடுக்க முடிகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்ட உடன் அதனை இன்டர் நெட்டில் அப்லோடு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அப்லோடு செய்ய ப்படும் தகவல்கள் டெல்லி யில் உள்ள மத்திய குற்ற ஆவண காப்பகத்தில் பைல் செய்யப்படுகிறது. இதற்காக “போல்” என்ற பெயரில் தனி இணையதளம் தொடங்கப்படுகிறது. தனி அலைவரிசையில் இயங்குவதால் இன்டர்நெட்டில் அப்லோடு செய்யப்பட்டாலும் இதன் தகவல்களை காவல் நிலையங்களில் மட்டு மே பார்க்க முடியும். இதற் காக “சிபாரேட்டிவ் போலீஸ் அப்ளி“ என்ற பெயரில் தனி மென்பொருளும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டி.ஜி.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வழக்குளை பதிவு செய்த உடன் அதுகுறித்த விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
இதன் மூலம் தீவிரவாதம் உள்ளிட்ட செயல்கள் மட்டுமின்றி வெளி மாநில கொள்ளையர்கள் மற்றும் கொலையாளிகள் பற்றிய தகவலும் ஒரு நிமிடத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களுடன் பகிர்ந்து தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள முடியும். காணாமல் போனவர்கள் குறித்த தகவல்கள் படத்துடன் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவதால் அவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் இந்த முறை மிகவும் உதவும். தற்போது போக்குவரத்து மற்றும் விபத்துகள் குறித்து விபரங்கள் இம்முறையில் அனுப்பப்பட்டு வருகின்றன. இதன் செயல்பாடு அனைத்து பிரிவுகளிலும் முழுமையடைய ஒரு ஆண்டு வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக