திங்கள், 8 பிப்ரவரி, 2010
தீவிரவாதிகள் இருப்பதாக தகவல்: துபாய் கிளம்பிய விமானம் தரையிறக்கம்!
மும்பை: மும்பை யில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த தகவலால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மும்பை விமான நிலையத்தில் இருந்து ஈகே505 எமிரேட்ஸ் பயணிகள் விமானம் துபாய்க்கு இன்று காலை புறப்பட்டது. அப்போது திடீரென மும்பை விமான நிலையத்துக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், உஷாராக இருக்குமாறும் அதில் கூறப்பட்டது.இதையடுத்து காலை சுமார் 10 மணிக்கு துபாய் கிளம்பிய விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்பட்டது.விமானத்தில் இருந்த 356 பயணிகள் மற்றும் பொருட்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன.இதில் இரண்டு பயணிகளை மட்டும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் கடத்தப்படுவதாகவும் தகவல் பரவியதால் மேலும் பரபரப்பு கூடியது.
0 comments:
கருத்துரையிடுக