ஞாயிறு, 7 மார்ச், 2010

செப் 11 தாக்குதல் தீவிரவாதிகள் நடத்தியது என்பது வடிகட்டிய பொய்: அஹமதிநிஜாத்


கடந்த 2001 ஆம் ஆண்டில் நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்கள் அமெரிக்க அரசே திட்டமிட்டுத் தன்னுடைய உளவு நிறுவனங்கள் மூலம் நடத்தியத் திட்டமிட்ட தாக்குதல்கள் என்றும் அவை தீவிரவாதத் தாக்குதல்கள் என்று பொய்கூறி ஆப்கானிஸ்தான் மீதும் இராக் மீதும் தாக்குதல்களைத் தொடுக்கத் தயார் செய்யப்பட்ட நாடகம் என்றும் அஹம்திநிஜாத் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈரான் அணுஆயுத சோதனைகளில் மேன்மேலும் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் அநாட்டின் மீது மேலும் பற்பல மீது மேலும் பல பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வரும் நிலையில் அஹம்திநிஜாத்தின் இந்தக் கூற்று மேலும் அமெரிககவைச் சினமுறச்செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப் 11 தொடர்பான அமெரிக்காவின் விளக்கங்களை எப்போதும் கேள்விக்குட்படுத்தி வந்த அஹம்திநிஜாத் அவை அனைத்தையும் முழுப்பொய் என வர்ணித்திருப்பது இதுவே முதன்முறையாகும். கடந்த 2007 ஆம் ஆண்டு நியூயார்க் நகருக்கு ஐநாவில் உரையாற்றச் சென்ற போது அஹமதிநிஜாத் இரட்டைக்கோபுரத் தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட முயன்ற போது அமெரிக்கா அவருக்கு அனுமதியை மறுத்தது. புவிச்சூடேற்றம், உலகப் பொருளாதார நெருக்கடி உள்பட உலகின் பல பிரச்னைகளுக்கு அமெரிக்கா தான் ஊற்றாக இருந்தாலும், உலகின் பிற நாடுகள் அதற்கான சுமையைச் சுமக்க வேண்டி இருப்பது பரிதாபமான சூழலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக