ஞாயிறு, 28 மார்ச், 2010

ஏப்ரல் 1க்குப் பிறகு பிளாஸ்டிக் இல்லா ‘குமரி’ உருவாகும் - கலெக்டர் ராஜேந்திர ரத்னூ


அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் கல்லுவிளையில் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. முகாமில் அவர் பேசியதாவது:
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அளவில் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு குறித்த தகவல்கள் சென்றடைந்துள்ளன. வரும் 1ந் தேதிக்கு பின்பு குமரி மாவட்டம் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உபயோக படுத்தாத மாவட்டமாக மாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். கேடு விளைவிக்கின்ற பிளாஸ்டிக் பைகளை இனி யும் உபயோகிக்கூடாது என்பதில் நாம் அனைவரும் மன உறுதி யோடு இருக்கவேண்டும். இவ்வாறு பேசினார்.

இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜவஹர், பஞ்சலிங்கபுரம் மைலாடி ஊராட்சி தலைவர்கள் கண்ணன், சாய்ராம் ஆகியோர் பேசினர். முகாமில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கப்படம் திரையிடப்பட்டது. 

0 comments:

கருத்துரையிடுக