சனி, 27 மார்ச், 2010

நாகர்கோவிலிலும் குப்பையில் கொட்டப்பட்டு கிடந்த காலாவதி மருந்துகள்!

நேற்று (வெள்ளி) நாகர்கோவில் நாகராஜா கோயில் குறுக்கு தெரு பகுதியில் குப்பைகள் கொட்டும் இடத்தில் மருந்துகள் கொட்டப்பட்டு கிடந்தன. ஊசி மருந்துகள், குழந்தைகளுக்கான டானிக்குகள் உள்ளிட்டவை கிடந்தன. இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு கொட்டப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. நாகர்கோவிலில் உள்ள மருந்து மொத்த விற்பனை நிலையங்களில் இருந்து கொட்டப்பட்டவையா? அல்லது மெடிக்கல் ஸ்டோர்களில் இருந்து கொண்டு வந்து கொட்டி இருப்பார்களா? என்பது தெரிய வில்லை. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குமரி மாவட்டத்திலும் அதிரடி சோதனை கள் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே குப்பைகள் ஆங்காங்கே சேகரிப்பவர்களை போலீசார் ரகசியமாக கண்காணிக்கின்றனர். மருந்து கடைகள், குடோன்கள் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் இருந்து குப்பைகள் எடுக்கிறவர்கள் மருந்து , மாத்திரைகள் எதுவும் கிடந்தால் உடனடியாக அது பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண் டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர். 

0 comments:

கருத்துரையிடுக