செவ்வாய், 9 மார்ச், 2010

64 நாட்களில் 26 வங்கிகள் திவால்!

உலகப் பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து சரிந்திருந்த அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சி பெற ஆரம்பித்திருந்தாலும் அங்கு வங்கிகள் திவாலாவது மட்டும் தொடர்கிறது. இந்த ஆண்டு இதுவரையில் 26 வங்கிகள் அமெரிக்காவில் திவாலாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 15 வங்கிகளும் பிப்ரவரி மாதம் 7 வங்கிகளும் இந்த மாதம் 5-ம் தேதி ஒரே நாளில் 4 வங்கிகளும் திவாலாகிவிட்டதாக அறிவித்துள்ளன.
2008 செப்டம்பர் மாதம் லெமான் பிரதர்ஸ் என்ற அமெரிக்க நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவித்தபோது உலகமே அதிர்ந்தது. அமெரிக்காவின் பங்குச் சந்தை வர்த்தகம் நடைபெறும் வால் ஸ்ட்ரீட்டிலேயே தலைமையகத்தைக் கொண்டிருந்த லெமான் பிரதர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய வங்கியாக உலகின் நிதி வட்டாரங்களில் கருதப்பட்டு வந்தது.. அந்த நிறுவனமே திவால் என்று அறிவித்தபிறகு ஏராளமான நிதி நிறுவனங்கள் திவால் நோட்டீஸ் கொடுத்து வருகின்றன. இதில் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆகியவைகளும் உட்படும்.
சென்டினியல் பேங்க், வாட்டர் ஃபீல்ட் பேங்க், பேங்க் ஆஃப் இல்லினாய்ஸ், சன் அமெரிக்கன் பேங்க் ஆகியவை மார்ச் மாதம் 5-ம் தேதி திவால் நோட்டீஸ் கொடுத்தன. இந்த நான்கு வங்கிகள் திவாலானதால் அமெரிக்காவிற்கு மொத்தம் 30.48 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக