சனி, 6 மார்ச், 2010

மனிதனின் சராசரி ஆயுள் அதிகரிப்பு ஆண் & 68, பெண் & 70 வயது.

மனிதனின் சராசரி ஆயுள் அதிகரித்து ஆண்கள் 68 வயது வரையிலும் பெண்கள் அதை விட அதிகமாக 70 வயது வரையிலும் வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என சுகாதார துறை இயக்குனர் இளங்கோ தெரிவித்தார்.
ஓட்டல்களின் உணவு பொருட்களை கையாளும் விதம் குறித்து அதில் பணியாற்றும் ஊழியர், அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் மதுரையில் நடந்தது. மதுரை மாநகராட்சி ஆணை யாளர் செபாஸ்டின் தலை மை வகித்தார். தமிழக சுகாதார துறை இயக் குனர் இளங்கோ துவக்கி வைத்து பேசிய தாவது: தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் இந்த பயிற்சி அளிக்கப் படுகிறது. விரை வில் தமிழகம் முழுவதும் பயிற்சி அளிக்கப்படும்.
விவசாயிகள் தான் முழுமையாக வீட்டில் சமைத்து சாப்பிடு கிறார்கள். நகர் பகுதிகளில் வாழ்வோர், வெளியிட ங்களில் வேலை செய் வோர், நீண்ட தூரம் வேலை க்கு செல்வோர், கண வன், மனைவி இரு வரும் மாதச் சம்பளம் வாங்குவோர் போன்றோர் வீடுகளில் சமையலை குறைந்து ஓட்டலை நாடுகிறார்கள். சமீப காலமாக ஓட்டலில் சாப்பி டுவோர் எண் ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. எனவே ஓட்டல்களில் சுகாதாரமான சத்துள்ள, ஆரோக்கியமான உணவு வழங்க வேண்டும். சமைத்த உணவை கெட்டுப் போகாமல் பாது காப்புடன் வைத்திருந்து வழங்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப உணவு வகைகள் மாறி உள்ளன. எனவே அதற்கு ஏற்ப ஓட்டல்களில் உணவு வழங்க வேண்டும். அதற்காக தான் இந்த பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்தபோது மனிதனின் சராசரி வயது 44 வயதாக இருந்தது. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வின்படி சராசரி வயது ஆண்களுக்கு 68, பெண்களுக்கு 70தாக உள்ளது. அம்மை, பிளேக், மலேரியா, காலரா போன்றவை ஒழிக்கப்ப ட்டுள்ளதாலும், நவீன மருத்துவ முறைகளாலும் மனிதனின் சராசரி வாழ் நாள் அதிகரித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக