சனி, 6 மார்ச், 2010
நித்யானந்தாவுடன் மோடிக்கு தொடர்பு
ஆன்மீக தலைவர் என உலகம் முழுவதும் பிரபலமான சுவாமி நித்யானந்தா, பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது நித்யானந்தாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆன்மீக வேடத்தில் வலம் வந்து மக்களை ஏமாற்றிய அவரை கைது செய்ய வேண்டும் என்று சென்னை, கோவை, குமரி உள்ளிட்ட இடங்களில் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவையில் இந்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சுவாமி நித்யானந்தாவுக்கு உலகம் முழுவதும் ஆசிரமங்கள் இருக்கின்றன. நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகளில் வெளியானதில் இருந்து அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த பிரச்னை வட மாநிலங்களிலும் வெடித்துள்ளது. நித்யானந்தாவின் ஆசிரமத்தை முடக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் குஜராத் சட்டசபையில் «நித்யானந்தா விவகாரம் வெடித்தது. நித்யானந்தாவுக்கு அங்குள்ள வதோராவில் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்துக்கு குஜராத் முதல்வர் மோடி அடிக்கடி சென்று வந்துள்ளார். பெண்கள் கல்வியை ஊக்குவிப்பதற்காக குஜராத் மாநில அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்துக்கு ரூ.2.5 லட்சம் நித்யானந்தா நிதியாக வழங்கினார். இதற்கான நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் மோடி பங்கேற்று நிதி பெற்றுள்ளார். மேலும் ஆசிரமத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றிலும் மோடி பங்கேற்று இருக்கிறார்.
எனவே நித்யானந்தாவுடன் மோடி நெருக்கமாக இருந்துள்ளார் என்று கூறி சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் காங்கிரசை சேர்ந்த அர்ஜுன் மோத்வாடியா குற்றம் சாட்டினார். இது தொட ர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் காங். குற்றச்சாட்டு
Labels:
நரேந்திர மோடி,
நித்யானந்தா
0 comments:
கருத்துரையிடுக