சனி, 6 மார்ச், 2010
இனயம் முஸ்லிம் ஜமாத் தேர்தல் நடத்த வக்பு வாரியம் உத்தரவு.
இனயத்தில் முஸ்லீம் ஜமாத் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்யும்படி வக்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தேங்காப்பட்டணம் அருகே இனயத்தில் குத்பா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளியின் நிர்வாகக்குழு கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும், தேர்தல் மூலம் முறையான நிர்வாகக்குழுவை தேர்வு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் ஏற்கனவே வக்பு வாரிய அதிகாரிகளுக்கும், அரசுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கடந்த மாதம் வக்பு அதிகாரிகள் இனயத்தில் விசாரிக்க வந்த போது அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தகராறு செய்து போராட்டம் நடத்தினார்கள். பின்னர் போலீஸ் துணையுடன் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் புகார் தெரிவித்ததை தொடர்ந்து தற்போதைய நிர்வாகத்திற்கு தமிழ்நாடு வக்பு வாரியத்தின் முதன்மைச்செயலாளர் ஜமாலுதின் என்பவர் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் இனயம் நிர்வாகக்குழு தேர்தலை வக்பு அதிகாரிகள் முன்னிலையில் உடனடியாக நடத்த வேண்டும் எனவும், வக்பு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Labels:
வக்பு வாரியம்;
0 comments:
கருத்துரையிடுக