திங்கள், 8 மார்ச், 2010

டெல்லி விமான நிலையத்தில் நிர்வாண ''ஸ்கேன்'' கருவி

சென்ற ஆண்டு அமெரிக்க டெட்ராய்ட் நகர விமானததிற்குள் வெடிகுண்டுகளைக் கொண்டு சென்றதையடுத்து சர்வதேச விமான நிலையங்களில் முழு உடலையும் பரிசோதிக்கும் ஸ்கேன் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் முழு உடலையும் நிர்வாணமாக இக்கருவி காட்டும் என்பதால் சில நாடுகளில் எதிர்ப்பு கிளம்பின.
இந்நிலையில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிர்வான ஸ்கேன் கருவியை அடுத்தமாதம் அமைக்க உள்ளதால் எதிர்ப்பு கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய வான்வழிப்போக்குவரத்து அமைச்சர் பிரபுல்பட்டேல் கூறும்போது, இந்தியாவுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. எனவே இந்த கருவியை நாமும் பொருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நவீன பாதுகாப்பு வசதிகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.
இக்கருவி உடலை நிர்வாணமாக காட்டுவது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது ந்த ஸ்கேன் கருவி முழு உடலையும் பரிசோதனை செய்தாலும் உடலை அருவருக்கத்தக்க முறையில் காட்டாது. எனவே கருவிக்கு பிரச்சினை இருக்காது என்றார்.

0 comments:

கருத்துரையிடுக