சனி, 20 மார்ச், 2010
இரண்டு ஃபலஸ்தீன் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
இரண்டு ஃபலஸ்தீன் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை ஏற்படுத்தியுள்ளது. கஸ்ஸாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமிய நேசனல் வங்கிக்கும், தொலைக்காட்சி அலைவரிசையான அல் அக்ஸா தொலைக்காட்சிக்கும் அமெரிக்காவின் ட்ரஷரி தடைவிதித்துள்ளது.
ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸுடன் தொடர்பு எனக்கூறித்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கியின் வழியாக 15 லட்சம் டாலர் பணபட்டுவாடா நடவடிக்கையை ஹமாஸ் நடத்தியதாகவும், வங்கியின் செயல்பாடுகள் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்றும் அமெரிக்க ட்ரஷரி கூறுகிறது.
ஹமாஸ் ஆதரவுச் செய்திகளை ஒளிபரப்பியதாக கூறித்தான் அல் அக்ஸா தொலைக்க்காட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Labels:
அமெரிக்கா,
பலஸ்தீன்,
anti-islam
0 comments:
கருத்துரையிடுக