வியாழன், 25 மார்ச், 2010
ஹிந்து - இந்தியன் எக்ஸ்பிரஸ் மோதல் - பத்திரிக்கை உலகில் பரபரப்பு.
இந்தியாவின் முன்னனி செய்தி பத்திரிக்கைகளான ஹிந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்
பத்திரிக்கைகளுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தன்னை பற்றி தவறான செய்திகளை
வெளியிட்டுள்ளதாக ஹிந்து பத்திரிக்கையின் தலைமை ஆசிரியரும், பிரபல
பத்திரிக்கையாளருமான என். ராம் நீதிமன்றத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மீது வழக்கு
தொடர்வது குறித்து ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி இந்திய பத்திரிக்கை உலகை
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
தற்போது தி ஹிந்து,
ஸ்போர்ட்ஸ்டார், பிஸினஸ் லைன், ப்ரன்ட் லைன் போன்ற பத்திரிக்கைகளை கஸ்தூரி &
சன்ஸ் என்ற குழுமத்தின் சார்பில் என்.ராம் நடத்தி வருகிறார். இக்குழுமத்தில் என்.
ராம் சகோதரர்களும், மற்றும் அவருடைய குடும்பத்தினரரும் இயக்குனர்களாக இருந்து
வருகிறார்கள் என்றும், தற்போது குழுமத்தை நடத்தி வருவதில் இயக்குனர்களிடையே கருத்து
மோதல் ஏற்பட்டு இருப்பது தான் காரணம் என எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை செய்தி
வெளியிட்டுள்ளது.
இதில் இயக்குனர்களில்
ஒரு சாரர், என்.ராம் தலைமை ஆசிரியர் மற்றும் இயக்குனர் பதவியிலிருந்து ஒய்வு
பெறவேண்டும் என்று கோரியுள்ளதாகவும் இதனால் இயக்குனர்களிடையே பிளவு ஏற்பட்டு,
ராமுக்கு ஆதரவாக ஒரு சிலரும், எதிராக ஒரு சிலரும் இயங்கிவருவதாக எக்ஸ்பிரஸ் தனது
செய்தியில் குறிபிட்டுள்ளது.
இச்செய்திகளை
வன்மையாக மறுத்த என்.ராம், வெளியிடப்பட்ட செய்திகள் அனைத்து உணமைக்கு புறம்பானது
என்றும், இது குறித்து அவதூறு வழக்கு தொடர தனது வக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதா
குறிபிட்டுள்ளார். 80-களில் ராஜிவ் காந்திக்கு பெருத்த அரசியல் பின்னடைவை
ஏற்படுத்திய போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக இறங்கி புலனாய்வு
செய்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக