புதன், 24 மார்ச், 2010

கன்னியாகுமரி & களியக்காவிளை சாலையை பழுதுபார்க்க ரூ.2.76 கோடி.

கன்னியாகுமரி & களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் உள்பட பல இடங்களில் 3 அடி ஆழம், 5 அடி அகலத்தில் குழிகள் உள்ளது. இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு இலவச சட்ட உதவி மற்றும் மனித உரிமை அமைப்பாளர் கிரினிவாசபிரசாத் கடந்த 20.11.09 அன்றுமனு அனுப்பி இருந்தார். இதனையடுத்து 8.12.09 அன்று தமிழக முதல்வர் உத்தரவுப்படி வள்ளியூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையத்திற்கு குறிப்பிட்ட சாலையை பழுது குறித்து கடிதம் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து கிரினிவாச பிரசாத்திற்கு கன்னியாகுமரி திட்ட அலகை சேர்ந்த திட்ட இயக்குநர் பதில் அனுப்பியுள்ளார். அதில் கன்னியாகுமரி & களியக்காவிளை சாலையில் பழுதுகள் ஏற்கனவே அவ்வப்போது சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ.2.76 கோடியில் பழுது பார்க்க பணியாணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

0 comments:

கருத்துரையிடுக