வியாழன், 11 மார்ச், 2010
உலகை ஏமாற்ற செய்யப்படும் மேற்கின் கண்துடைப்பு விசாரணைகள்
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் 15 இலட்சம் முஸ்லிம்களுக்கும் அதிகமான மக்கள் அமெரிக்கா,பிரிட்டன் தலைமையிலான மேற்கு பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் எதுவும் அறியாத சிறு குழந்தைகள்தான் அதிகம் மேற்கு பயங்கரவாதம் ஈராக் பாலூஜா பிரதேசத்தில் பிறக்கும் அதிகமான குழந்தைகள் இன்றும் மிக பெரிய குறைப்பாடுகளுடன்தான் பிறக்கின்றது. பல இலட்சம் மக்களை கொலை செய்து இன்னும் பல இலட்சம் மக்களை முடமாகவும் ,குருடாகவும் , முண்டமாகவும் ஆக்கி தனது மேலாதிக்கத்தை நியாயப்படுத்தி நிற்கின்றது .
ஈராக் யுத்தம் தொடர்பாக பிரிட்டனில் நடந்துவரும் விசாரணையில் நேற்று வாக்குமூலம் அளித்த பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன், யுத்தத்துக்குச் செல்வதாக எடுக்கப்பட்ட முடிவுதான் சரி என்றும், சரியான காரணங்களுக்காகவே அந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது என்றும் தமது முஸ்லிம் சமூக அழிப்பை நியாயப்படுத்தியுள்ளார்
உலகத்தின் அமைதிக்கு ஈராக் ஒரு அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது என்ற தமது உளவுத் தகவலை ஆதாரமாக கொண்டு படையெடுத்ததாக கூறியுள்ளார் இதே போன்று பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் தொடரும் ஒரு அச்சுறுத்தலாக மாறிவந்தார். ஆதலால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரிட்டனும் அமெரிக்காவும் தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறியமை குறிபிட தக்கது
மேற்கு பயங்கரவாதம் தனது இலட்சக் கணக்கான மனித படுகொலைகளை நியாயப்படுத்த இவ்வாறுதான் விசாரணைகள் சாட்சியங்கள் , அறிக்கைகள் என்ற பெயரில் உலகை ஏமாற்றி வருகின்றது.
Labels:
அமெரிக்கா,
anti-islam
0 comments:
கருத்துரையிடுக