வியாழன், 11 மார்ச், 2010

அமெரிக்க உளவு விமான தாக்குதல்களுக்கு தொடர்ந்தும் பலியாகும் பாகிஸ்தான் கிராம மக்கள்

பாகிஸ்தான் வடக்கு வஸரிஸ்தான் பகுதியில் அமெரிக்க உளவு விமான நடத்திய பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 18 பேர் பலியானதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தாக்குதலை பாகிஸ்தான் உளவுத்துறை நேற்று உ று திப்படித்தியுள்ளது. முதல் தாக்குதல் பொது மக்கள் பிரயாணம் செய்த வாகனத்தின் மீது நடத்தபட்டது. இதன் போது 10 பேர் வரை பலியாகினர். இரண்டாவது தாக்குதல் வபாத்தா ஜனாசாகளை எடுத்துகொண்டு இருந்தவர்கள் மீது நடத்தபட்டுள்ளது. இதன் போது 8 பேர் கொல்லப்படுள்ளனர். இந்த தாக்குதலில் அதிகமான மக்கள் கடுமையாக காயபட்டுள்ளனர் . இது பற்றி அமெரிக்க தகவல் தாலிபான் ஆதரவு ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக கூறுகின்றது.
வாஷிங்டனை தளமாக கொண்டு இயங்கும் புத்திஜீவிகள் அமைப்பு ஒன்று கடந்த மாதம் வெளியிட்ட அதன் அறிக்கையில் கடந்த 6 வருடங்களில் மட்டும் அமெரிக்க உளவு விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் 1200 பேர் கொல்லபட்டுள்ளதாக கூறியுள்ளது, இது பற்றி கருது தெரிவித்த மற்றும் ஒரு அமெரிக்க புத்திஜீவிகள் அமைப்பு 1200 என்பது மிகவும் குறைந்த ஒரு தொகையாகும் கொல்லப்பட்டவர்கள், காயம் அடைந்தவர்களின் தொகை 1200 அல்ல அதன் பல மடங்காகும் என்று கூறியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக