செவ்வாய், 23 மார்ச், 2010

கணிணி மென்பொருள் துறையில் புதிய பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!

இந்தியாவிலிருந்து கணிணி மென்பொருள் ஏற்றுமதி செய்யும் பெரும் நிறுவனங்களில் ஒன்றான பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் அதிக அளவில் புதிய பட்டதாரிகளை பணியிலமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. 
முன்னதாக சுமார் 1500 பணியிடங்களுக்கு பணியாளர்களைச் சேர்க்க இருப்பதாக அறிவித்த அந்த நிறுவனம் அந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக ஆக்கியுள்ளது.   கணிணி மென்பொருள் மற்றும் அவுட்சோர்ஸிங் சேவைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு ஜெயகுமார் தெரிவித்தார்.
புதிதாக நிரப்பப்பட இருக்கும் 3000 பணியிடங்களில் சுமார் 70% புதிய பட்டதாரிகளைக் கொண்டும் மீதம் 30% அனுபவமுள்ள பணியாளர்களைக் கொண்டும் நிரப்பப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக