செவ்வாய், 23 மார்ச், 2010
சீனாவிலிருந்து முற்றிலும் 'SIGN-OUT' ஆனது கூகுள்.
இணையதளங்களை கடுமையாக தணிக்கை செய்து வருகிறது. இதனால் 'கூகுள்' நிறுவனம் அதிகம்
பாதிக்கப்பட்டது. மேலும் 'கூகுள்' அமெரிக்காவின் வேவு பார்க்கும் நிறுவனங்களுக்கு
துணை போவதாகவும் சீனா கடுமையான குற்றச்சாட்டியது. இதனால் இன்று முதல் கூகுள் டாட்
காம், தனது பிரதான சீனமொழி தேடுதளம் www.google.cn சேவைகள் வழங்குவதை நிறுத்திக்
கொண்டது. ஆனால் சீன மொழிக்கான தேடுதல் சேவைகளை ஹாங்காங்கில் இருந்து தொடரப் போவதாக
அது அறிவித்துள்ளது.
மேலும் www.google.cn எனும் சீன மொழியில் அமைந்திருந்த
தேடு தளத்திற்கு வரும் பார்வையாளர்கள், www.google.com.hk என்ற தளத்திற்கு
திருப்பிவிடப்படுவார்கள்.
கூகுள் நிறுவனம் இதுபற்றி கூறுகையில், 'இது
சாதாரண வர்த்தக நடைமுறை தான். பணியாளர்கள் அனைவரும் ஹாங்காங்கிற்கு
மாற்றப்படுவார்களா என்பது குறித்து இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. இவையாவும்
வர்த்தக செயல்பாடுகளுக்கான மாற்று ஏற்பாடுகள் மட்டுமே' என்றுள்ளது.
உலக
அளவில் 38 கோடி இன்டர்நெட் பார்வையாளர்களை கொண்ட சீன சந்தையில் இருந்து கூகுள்
வெளியேறுவது இணைய பொருளாதாரத்தில் மிக முக்கிய நிகழ்வாகும்.
0 comments:
கருத்துரையிடுக