செவ்வாய், 16 மார்ச், 2010
அமெரிக்கா குறித்து அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!
தெஹ்ரான்: அரபு நாடுகளுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் மத்திய கிழக்கின் இயற்கை வளங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்ச்சியை அமெரிக்கா மேற்க்கொண்டு வருகிறது என்று ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில் ஈரானின் எல்லை நாடுகளான ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்துள்ளது, மத்திய கிழக்கின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிட்டது என்று அவர் கூறினார்.
அமெரிக்காவிற்கு தஞ்சம் தரும் நாடுகளுக்கு எச்சரிக்கை! அவர்கள் பாதுகாப்பு தருவதற்க்காக வரவில்லை மாராக பாதுகாப்பான சூல்நிலையை சீர்குழைக்க வந்திருக்கிறார்கள் என்று ஹொர்முகன் என்ற இடத்தில் பேசிய அஹமது நிஜாத் இதனை தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள், வளைகுடாவின் இயற்கை வளங்களை நெருங்குமானால், அதன் மக்கள் அவர்களின் கைகளை வெட்டுவார்கள் என்றார். அமெரிக்க ராணுவ அதிகாரி ரொபர்ட் கடெஸ், ஈரானின் அணுசக்தி தொடர்பான பிரச்சனையில் சவுதிஅரேபியாவின் உதவியை நாடியுள்ளார் என்பதும், அதற்கு சவுதி மறைமுக ஆதரவு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக