செவ்வாய், 16 மார்ச், 2010
நாகர்கோயில் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் மோதல்.
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கல்லூரியில் தமிழக மற்றும் கேரள மாணவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டு 15 பேர் படுகாயமடைந்தனர்.
நாகர்கோவில் அருகே இறச்சக்குளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். நேற்றிரவு கேரள மாணவர்களுக்கும், தமிழக மாணவர்களுக்கும் இடையே சிறு பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் மோதலாக மாறியது. நள்ளிரவை நெருங்கும் வேளையில், இரு தரப்பினரும் கோஷ்டியாக சேர்ந்து ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர். கிரிக்கெட் ஸ்டம்ப், ஹாக்கி மட்டை என பலவற்றையும் கையில் எடுத்து மாணவர்கள் அடித்துக் கொண்டனர். உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் 15 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Labels:
நாகர்கோவில்
0 comments:
கருத்துரையிடுக