வெள்ளி, 5 மார்ச், 2010

மதுவுக்கு எதிராக மாணவ சமுதாயமே அணி திரள்வோம்!

தமிழகத்தில் அரசின் மதுக்கடைகள் மூலமாக மது விற்பனை பெருகிக் கொண்ட போகிறது. மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மது குடிப்பவர்களின் வரிசையில் இப்போது மாணவ சமுதாயமும் இணைந்திருக்கிறது. டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டத்தில் பள்ளி மற்றம் கல்லூரி மாணவர்களையும் காண முடிகிறது.
நண்பர்களின் திருமணம், பிறந்த நாள் விழா தேர்வுகளில் பாஸானாலும், பெயிலானாலும் மது குடிக்க வேண்டும் என்ற எண்ணமும் இன்றைக்கு மாணவ இளைஞர்களிடையே பெருகியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி 30 சதவீத மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளதாக செய்திகள் வருகின்றன.
நாட்டின் எதிர்கால தூண்கள், சமுதாயத்தை வழிநடத்தி செல்ல இருக்கும் எதிர்கால தலைவர்கள் மெல்ல மெல்ல மதுவுக்கு அடிமையாகி வரும் கொடூரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உடல் நலனையும், மன நலனையும் பாதிக்கும் மதுவின் தீமைகளிலிருந்து மாணவ சமுதாயம் விடுதலை அடைய வேண்டும். வகுப்பறையில் மது குடித்து விட்டு பள்ளியிலிருந்தே விரட்டப்பட்டு இன்று கல்வியை இழந்து நிற்கும் மாணவனை போன்று இனி வேறு யாரும் உருவாகிவிடக் கூடாது.
மதுவின் தீமைகளை பற்றி அறிந்ததும் அதில் வரும் வருமானத்திற்காக இன்று கல்விக் கூடங்கள் அருகிலேயே மதுக்கடைகளை திறந்து மாணவர்களை வழிகெடுக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியா இழுத்து மூடவேண்டும். அது மட்டுமல்ல தமிழகத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு மது இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். மாணவச் சமுதாயத்தை சீரழிக்கம் மதுக்கடைகளை இழுத்து மூட மாணவர்களே அணி திரள்வோம். எதிர்கால தலைமுறை மதுவின் வாடை அறியாத தலைமுறையாக மாற மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மதுக்கடை மறியல் போரில் பங்கேற்ப்போம்.

0 comments:

கருத்துரையிடுக