வெள்ளி, 5 மார்ச், 2010
தீவிரவாத இஸ்ரேலிய பிரதமர் நேதான்யகுவை கைது செய்ய துபாய் போலீஸ் சட்ட ஆலோசனை.
துபாய்:ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலையில் பங்காற்றியதாக தெளிவான ஆதாரம் கிடைத்த சூழலில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொஸாதின் தலைவர் மெயர் தகான் ஆகியோரை கைது செய்வதற்கான நடவடிக்கையை துபாய் போலீஸ் வலுப்படுத்தியுள்ளது.இதன் ஒரு பகுதியாக கைது வாரண்ட் பிறப்பிப்பதற்கு வழக்குரைஞருடன் சட்ட ஆலோசனைக் கோரியதாக துபாய் போலீஸ் தலைவர் தாஹி கல்ஃபான் தமீமி அறிவித்தார்.
கைதுச் செய்வதுக் குறித்து இந்தவாரம் முடிவுச் செய்யவிருப்பதாகவும், மொஸாதின் சதித்திட்டம் குறித்து அதிக விபரங்கள் கிடைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மப்ஹுஹ் கொலையில் கூறப்படும் குற்றச்சாட்டை இதுவரை இஸ்ரேல் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையே போலி சிம் கார்டு, க்ரெடிட் கார்டு ஆகியவை தயார் செய்ததைப் பற்றி எஃப்.பி.ஐ குழு அமெரிக்காவில் மெட்டா வங்கியில் ஆதாரங்களை சேகரித்தது. கொலையாளிகள் 13 பேருக்கு மெட்டா வங்கி க்ரெடிட் கார்டு வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தித்தான் கொலையாளிகள் விமான டிக்கெட் வாங்கியது, ஹோட்டல் அறையை முன்பதிவுச் செய்ததும். ஆனால் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை என மெட்டா வங்கி விளக்கம் அளித்துள்ளது. மப்ஹூ கொலைக்கு பிறகு இஸ்ரேலிய குடிமகன்கள் துபாயில் நுழைவது தடைச் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக