இவர்களில் சுனிதாராணியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.'காலாவதியான மருந்து மாத்திரைகளை நாங்கள் விலைக்கு வாங்கி, கோயம்பேட்டில் உள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து கடைகளில் கொடுத்து விடுவோம். அங்கு வைத்து தான் காலாவதியான மருந்து மாத்திரைகள், புதிய மாத்திரைகளாக உருவாக்கப்படுகின்றன' என்ற பகீர் உண்மையை வெளியிட்டார்.
ஞாயிறு, 21 மார்ச், 2010
குப்பையில் வீசப்பட்ட மருந்துகளை புதிதாக்கி விற்கும் மோசடி கும்பல் கைது!
சென்னையில் குப்பையில் வீசப்படும் மருந்து - மாத்திரைகளை எடுத்து மீண்டும்
புதிதாக்கி விற்பனை செய்து வந்த மோசடிக் கும்பல் கைது
செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 பேர் தப்பி ஓடிவிட்டனர். சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள மாநகராட்சி
குப்பை மேட்டில் கொட்டப்படுவதற்காக கொண்டு வரப்படும் மருத்துவமனைக் கழிவுகளை ஒரு
கும்பல் விலைக்கு வாங்கி, அதிலிருந்து காலாவதியான மருந்துகளை மட்டும் எடுத்து
மீண்டும் புதிதாக்கி விற்பதாக சென்னை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவுக்கு
தகவல் வந்துள்ளது.
உடனே அவர் மாநகர போலீசாரிடம் இதுபற்றி முறையான புகார்
அளித்தார். இதைத் தொடர்ந்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார் மாநகர கமிஷனர்
ராஜேந்திரன்.
வடசென்ன இணை கமிஷனர் சேஷசாயி, புளியந்தோப்பு துணை கமிஷனர்
பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் கொடுங்கையூர் போலீசார் விசாரணையை
தீவிரப்படுத்தியதில், குப்பை மேட்டுக்கு கொண்டு வரப்படும் காலாவதியான மருந்துகள்
யார் மூலமாக வாங்கப்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொடுங்கையூர்
முத்தமிழ்நகரை சேர்ந்த ரவி, அவரது மனைவி சுனிதா ராணி ஆகியோர்தான் இந்த மோசடியின்
முக்கியப் புள்ளிகள் என்பது தெரியவந்தது.
இவர்களில் சுனிதாராணியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.'காலாவதியான மருந்து மாத்திரைகளை நாங்கள் விலைக்கு வாங்கி, கோயம்பேட்டில் உள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து கடைகளில் கொடுத்து விடுவோம். அங்கு வைத்து தான் காலாவதியான மருந்து மாத்திரைகள், புதிய மாத்திரைகளாக உருவாக்கப்படுகின்றன' என்ற பகீர் உண்மையை வெளியிட்டார்.
உடனடியாக கோயம்பேடு மருந்து குடோனுக்கு சென்று அதிரடி சோதனை
நடத்தினர் போலீசார். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான
மருந்துகள் ஏராளமாய் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.4
லட்சம்.
இதுதொடர்பாக சுனிதா ராணி (வயது
29), கிருபாகரன் (30), ராமகிருஷ்ணன் (35), விஜயகுமார் (34), கோவிந்தன் (29),
ஜெகதம்மா (30), தர்மராஜன் (50) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில்
சுனிதாராணி தவிர மற்ற அனைவரும் மருந்து குடோனில் பணி புரிந்தவர்கள்.
விஷயம் அறிந்ததும், மீனா ஹெல்த்கேர் மருந்து குடோனின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம்
தலை மறைவாகிவிட்டார்.
இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட மேலும் 5 பேர் தப்பி ஓடி
விட்டனர். இவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக
இருப்பவர்கள் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு
நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என
போலீசார் மனுதாக்கல் செய்கிறார்கள்.
இதுதொடர்பாக புளியந் தோப்பு துணை
கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில், "காலாவதியான மருந்துகள் கோயம்பேட்டில் உள்ள மீனா
ஹெல்த்கேர் குடோனுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வைத்துதான் காலாவதியான
மருந்து மாத்திரைகளின் ரேப்பரில் உள்ள சீல் அழிக்கப்படுகிறது. அதில் இருக்கும்
உற்பத்தியான தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவற்றை கெமிக்கல் வைத்து அழித்து
விடுகின்றனர். பின்னர் தேதியை மாற்றி சீல் செய்து புதிய மருந்துகள் போல மருந்து
கடைகளில் விற்பனை செய்துள்ளனர்.
பெரிய நெட்வொர்க் அமைத்து இந்தக் கும்பல்
மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளோம். தலை மறைவாக உள்ளவர்களையும் கைது செய்ய
நடவடிக்கை எடுத்து வருகிறோம்..." என்றார்.
0 comments:
கருத்துரையிடுக